» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!

ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்திய 2 போலி சாமியார்களை போலீசார் கைது செய்தனர்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கேரள போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாநில எல்லை சோதனை சாவடிகளில் கலால்துறை அதிகாரிகள் வாகன சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார்கள். 

அந்த வகையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ்சில் நெய்யாற்றின்கரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் வைத்திருந்த துணி பைகளை சோதனை செய்த போது அதில் தலா 2½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், இருவரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பரிமல் மண்டல், பஞ்சனன் மண்டல் என்பதும், சாமியார் வேடத்தில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை கடத்தி கேரளாவில் யாருக்கு சப்ளை செய்ய திட்டமிட்டனர் என்பது தொடர்பாக 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக நெய்யாற்றின்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory