» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (30.06.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- மார்த்தாண்டம் வெட்டூர்ணிடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவ அறை, பிரசவ வார்டுகள், தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிரசவ அறையின் சுத்திகரிப்பு நடைமுறைகள், கிருமிநாசினி பயன்பாடுகள் குறித்தும், உள்நேயாளிகளின் பரிசோதனை விவரங்கள் குறித்தும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளார்களான என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனைகளிலும் பிரசவம் நடைபெறும் நேரங்களில் தாய் மற்றும் குழந்தையின் நலனைக் கண்காணிக்கவும், தேவையான தருணத்தில் முறையான மேற்சிகிச்சையை வழங்க பரிந்துரை செய்யவும், இரத்தம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முன்கூட்டியே அவர்களின் ரத்த வகைக்கு ஏற்ப இரத்த வங்கியில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மகப்பேற்றின்போது அரசால் வகுக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிகிச்சை வழங்கப்படுகிறதா என மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மகப்பேறு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் மகப்பேறு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மகப்பேறு மருத்துவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் மாதத்திற்கு 50 பிரசவத்திற்கு மேல் நடைபெறும் மருத்துவமனைகளில் குறைந்தது 2 முதல் 3 மகப்பேறு மருத்துவர்களும், மாதத்திற்கு 100 பிரசவத்திற்கு மேல் நடைபெறும் மருத்துவமனைகளில் குறைந்தது 4 முதல் 5 மகப்பேறு மருத்துவர்கள் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த தகவல்களை விளக்கமாக நோயாளிகள் புரிந்து கொள்ளும் வகையிலும், அவர்களுடன் வருபவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
தாய் மற்றும் சேய்நல மருத்துவர்கள் சனி ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருப்பதை இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணி உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். ஆய்வில் பத்மநாப புரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, இணை இயக்குநர் மருத்துவம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மகப்பேறு தலைமை மருத்துவர்கள், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
