» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட, சைமன் காலனி ஊராட்சி மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், குருந்தன்கோடு வட்டாரத்திற்குட்பட்ட, சைமன் காலனி ஊராட்சி மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –குருந்தன்கோடு வட்டாரத்திற்குட்பட்ட சைமன் காலனி ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சார்ந்த சுய உதவி குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் மீன் மதிப்பு கூட்டுதல் பொருட்களான மீன் ஊறுகாய், மீன் கட்லெட், மீன் பக்கோடா, கருவாடு, கருவாட்டுப்பொடி போன்ற வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் அலை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டு வரும் பல்வேறு விதமான மூலிகை குளியல் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற உற்பத்தி பொருட்கள் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் செயல்பட்டு வரும் சுய உதவி குழு மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம், வாழ்வாதார செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் உறுப்பினர்களின் விபரம், தினசரி உற்பத்தி திறன், சந்தைப்படுத்துதல் மற்றும் இலாப விபரங்கள் குறித்து கேட்டறியப்பட்டது. இத்தொழில்கள்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனை திறன் மற்றும் சந்தைப்படுத்தும் திறனை மேலும் அதிகரித்திடும் விதமாக பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் இணையதள விற்பனையில் அதிக கவனம் செலுத்திட வேண்டுமென சுய உதவிக்குழுவினரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
சுய உதவிக்குழுவினர் மேற்கொண்டுவரும் இத்தொழில்களை அதிக அளவில் விரிவாக்கம் செய்து அதிக அளவிலான உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் தேவையான தொழில் கூடம் அமைத்தல், UNDP திட்டத்தின் கீழ் உறுப்பினர்களை பயன்பெறச் செய்தல், பேக்கேஜிங் மற்றும் உற்பத்திக்கு தேவையான பொருட்களை மாவட்ட அளவில் மொத்த கொள்முதல் மேற்கொண்டு உறுப்பினர்களுக்கு வழங்கிட திட்ட இயக்குனர் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
ஆய்வின்போது மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட அலுவலர்கள், சுயஉதவிக்குழுவினர், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)
