» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

அமெரிக்காவிடமிருந்து பல்வேறு அழுத்தம், தடைகள் இருந்தபோதிலும், இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா நேற்று கூறியதாவது: அமெரிக்காவிடமிருந்து ஏராளமான அழுத்தங்கள் மற்றும் தடைகள் உள்ள போதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். தள்ளுபடிகளைப் பொறுத்தவரை அது ஒரு வணிக ரகசியம். எனினும், பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு தள்ளுபடியின் அளவு 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ரஷ்ய துணைத் தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறும் போது, "இந்தியா சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், எங்களது உறவில் நம்பிக்கை உள்ளது. வெளிப்புற அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory