» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)



உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபா் புதினுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளாா்.

அலாஸ்காவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்போது, டிரம்ப் இந்தக் கடிதத்தை புதினிடம் நேரடியாக வழங்கினாா். டிரம்ப் ஆதரவாளா்கள் மூலமாக பொதுவெளியில் வெளியான கடிதத்தில் உக்ரைன் என நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புவி, அரசு மற்றும் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட அப்பாவித்தனத்தை புதின் கருத்தில் கொள்ள வேண்டும்’ என மெலனியா டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

‘ஒரே ஒரு எழுதுகோல் அசைவில் குழந்தைகளின் சிரிப்பை மீட்டெடுக்க முடியும். இது ரஷியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சேவை செய்வதாக இருக்கும்’ என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா். ரஷிய படைகள் கடந்த 2022-இல் உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, அந்நாட்டு குழந்தைள் கடத்திச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடா்பாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், புதின் மீது போா்க்குற்றங்கள் சுமத்தி, பிடியாணையும் பிறப்பித்துள்ளது. குழந்தைகளின் கடத்தலுக்கு அவரே தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory