» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப் - புதின் சந்திப்பு: உக்ரைன் போர் முடிவு குறித்து உடன்பாடு ஏற்படவில்லை!!
சனி 16, ஆகஸ்ட் 2025 10:13:02 AM (IST)

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என புதினை சந்தித்த பின் டிரம்ப் கருத்து கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து அலாஸ்காவில் நேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் இரு தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
இருவரும் பேசுகையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, உக்ரைன் - ரஷிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில், தனக்கும் டிரம்புக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக புதின் கூறினார், மேலும் இந்த புதிய முன்னேற்றத்தை நாசமாக்க வேண்டாம் என்று ஐரோப்பாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.
ஆனால் டிரம்ப் பேசுகையில், "ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை அது எந்த ஒப்பந்தமும் இல்லை" என்றார். உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் விரைவில் பேச திட்டமிட்டுள்ளதாகவும், இங்கு நடந்த விவாதங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையாக இது அமைந்ததாகவும், பல முக்கிய விவகாரங்களை தாங்கள் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார் டிரம்ப். ஆனால் மேலும் சில விஷயங்கள் விடுபடுவிட்டன. அதில் சில விவகாரங்கள் அவ்வளவு முக்கியமானவை அல்ல. ஒரு சில மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால், அவற்றை சரி செய்ய, மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த இடத்தை அடைய முடியவில்லை என்றார்.
1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போராக உக்ரைன் - ரஷிய போர் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த பயங்கர போரை முடிவுக்குக் கொண்டு வர அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான உடன்பாடு எட்டப்படாமல் இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு முடிந்திருக்கிறது.
இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அதற்கு பதிலாக மாறி மாறி சுருக்கமான கருத்துக்களை தெரிவித்துவிட்டு புறப்பட்டுவிட்டனர். முதலில் புதினும் பின்னர் டிரம்பும் புறப்பட்ட நிலையில், இருவருமே செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வெளியேறியிருக்கிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாஸ்கோ வரை பாயும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவேன்: ரஷியாவுக்கு டிரம்ப் மிரட்டல்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:28:15 AM (IST)

2025ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
திங்கள் 13, அக்டோபர் 2025 5:21:39 PM (IST)

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி
திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

ராஜினாமா செய்த 4 நாட்களில் பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் மீண்டும் நியமனம்
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:24:27 AM (IST)

படைகள் வாபஸ் பெறப்பட்டன காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
சனி 11, அக்டோபர் 2025 4:30:39 PM (IST)

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் : ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்து
வெள்ளி 10, அக்டோபர் 2025 9:25:54 PM (IST)
