» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 150பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!!

சனி 16, ஆகஸ்ட் 2025 10:26:52 AM (IST)



பாகிஸ்தானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள லோயர் டிர், பஜவுர், அபோட்டாபாத் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் இடையே உள்ள காரகோரம், பால்டிஸ்தான் நெடுஞ்சாலைகள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன. 

இதனால் அந்த நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். எனவே அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல் பஞ்ச்கோரா, சுத்னோதி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மைதான் சோரி பாவ் நகரில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த நிலச்சரிவு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் மேலும் பலர் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory