» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து கோர விபத்து: மாணவர்கள் உள்பட 19 பேர் பலி!

செவ்வாய் 22, ஜூலை 2025 8:53:27 AM (IST)



வங்கதேசத்தில் பயிற்சியின்போது பள்ளி மீது போர் விமானம் விழுந்து மாணவர்கள் உள்பட 19 பேர் பலியாகினர். 160-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

வங்கதேசத்தின் குர்மிடோலா என்ற இடத்தில் அந்த நாட்டின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு வழக்கமாக வீரர்கள் விமானத்தில் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு எப்-7 பி.ஜி.ஐ. என்ற போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் விமானி மற்றும் பயிற்சி வீரர்கள் இருந்தனர். இந்த விமானம் சீனாவின் தயாரிப்பாகும்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட பள்ளிக்கூடம் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. சிறிது நேரத்தில் அந்த விமானம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

இதனை கேள்விப்பட்டதும் மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடிச்சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் அங்கு வரவழைக்கப்பட்டன. அவர்களது பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மற்றொருபுறம் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட 19 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட இந்த விபத்து நாட்டையே உலுக்கியது. எனவே விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory