» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் தலையீடு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்: காமெனி எச்சரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 4:44:06 PM (IST)

அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் போரை தூண்டுவதாக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல்- ஈரான் இடையே கடந்த சில தினங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானின் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் தலைநகர், மொசாட் தலைமையகம் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்றிரவு உச்சக்கட்டமாக ஈரான், ஹைபர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம் போர் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என ஈரான் நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை.
ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் எந்தவொரு தலையீடும் பிராந்தியத்தில் போரை தூண்டுவதாக இருக்கும் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)

இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : அமெரிக்கா விளக்கம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:12:27 AM (IST)

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சனி 16, ஆகஸ்ட் 2025 12:14:42 PM (IST)

தேச பக்தன்Jun 20, 2025 - 11:41:38 AM | Posted IP 172.7*****