» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகை : பிரதமர் நரேந்​திர மோடி வரவேற்பு!

வெள்ளி 5, டிசம்பர் 2025 10:25:58 AM (IST)



இரு நாட்​கள் அரசு முறை பயண​மாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்​திர மோடி விமான நிலை​யத்​தில் நேரில் வரவேற்​றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்​தார்.

இரு தலை​வர்​களும் இன்று பேச்​சு​வார்த்தை நடத்​துகின்​றனர். அப்போது இரு நாடு​கள் இடையே 25 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2000-ம் ஆண்​டில் முதலா​வது இந்​திய, ரஷ்ய வரு​டாந்​திர உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெற்​றது. இந்த வரிசை​யில் 22-வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஜூலை​யில் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நடைபெற்றது.

இதன்​ தொடர்ச்​சி​யாக 23-வது இந்​திய, ரஷ்ய உச்சி மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரு நாட்​கள் அரசு முறை பயண​மாக நேற்று மாலை 6.35 மணிக்கு டெல்​லிக்கு வந்​தார். டெல்லி பாலம் விமான நிலை​யத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி அவரை நேரில் வரவேற்றார். ஆரத் தழுவி வாழ்த்​துகளை பரி​மாறிக் கொண்​டார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்​திர மோடி சார்​பில் அதிபர் புதினுக்கு சிறப்பு இரவு விருந்து அளிக்​கப்​பட்​டது. அப்​போது இரு தலை​வர்​களும் முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.  தொடர்ந்து, நேற்றிரவு பிரதமர் தனது இல்லத்தில் புதினுக்கு இரவு விருந்தளித்தார். அப்போது, ரஷிய மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை புதினுக்கு பரிசாக அளித்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, ”கீதையின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் புதினுக்கு அணிவகுப்பு மரியாதை அளித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரவேற்கவுள்ளார்.

தொடர்ந்து, ஹைதராபாத் மாளிகையில் நடைபெறும் 23-ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு புதினும், மோடியும் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.ராணுவ தளவாடங்கள், வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனையில் இருநாட்டுத் தலைவர்களும் ஈடுபடவுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின்னர், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாக இருக்கிறது.

இதன்​பிறகு டெல்லி ஐடிசி மவுரியா ஓட்​டலில் அதிபர் புதின் நேற்​றிரவு தங்கினார்.குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் இன்று காலை 11 மணிக்கு அவருக்கு ராணுவ அணி வகுப்​புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது. இதன்​பிறகு மகாத்மா காந்தி நினை​விடத்​தில் அதிபர் புதின் அஞ்​சலி செலுத்​துகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory