» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விவசாயியின் மகளின் திருமணத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு: கிராம மக்கள் நெகிழ்ச்சி
செவ்வாய் 10, மார்ச் 2026 5:44:52 PM (IST)

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகளின் திருமணத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் கலந்து கொண்டார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மதினா கிராமம் வழியாகச் சென்றபோது, ராகுல் காந்தி திடீரென அங்கிருந்த விவசாயி சஞ்சய் மாலிக்கை சந்தித்தார். அப்போது வயல்வெளியில் அவரோடு இணைந்து வேலை செய்த ராகுல், விவசாயக் குடும்பங்கள் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் துயரங்களைக் கேட்டறிந்தார். அந்தச் சமயத்தில், சஞ்சய் மாலிக்கின் குடும்பத்தின் இன்ப துன்பங்களில் என்றும் துணை நிற்பேன் என ராகுல் காந்தி உறுதியளித்திருந்தார்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விதமாக, இன்று காலை மதினா கிராமத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவரை ரோஹ்தக் தொகுதி காங்கிரஸ் எம்.பி. தீபிந்தர் சிங் ஹூடா மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் பச்சை நிற பேன்ட் அணிந்திருந்த ராகுல் காந்தி, திருமண வீட்டில் வழங்கப்பட்ட பாரம்பரிய உணவுகளை ருசித்து மகிழ்ந்தார்.
ராகுல் காந்தியின் வருகையால் நெகிழ்ந்து போன விவசாயியின் குடும்பத்தினர், அவருக்குத் தலைப்பாகை அணிவித்துத் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கௌரவித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் தலைவர் (ஜனநாயக நாயகன்) ராகுல் காந்தி, விவசாயி சஞ்சய் மாலிக்கின் குடும்ப மகிழ்ச்சியில் ஒரு அங்கமாக இன்று மாறியுள்ளார்," என்று புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், சாதாரண விவசாயியின் வீட்டிற்குச் சென்று ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!
புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம் : தெலங்கானா கிராம மக்கள் அதிரடித் தீர்மானம்!
புதன் 10, ஜூன் 2026 12:13:28 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)



இதுMar 10, 2026 - 06:37:07 PM | Posted IP 172.7*****