» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு: மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை செயலர் உத்தரவு
திங்கள் 9, மார்ச் 2026 12:46:02 PM (IST)
மேற்கு வங்கத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முறைப்படி வரவேற்காமல் அவமதிப்பு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிலிகுரி அடுத்த பிதான் நகரில் 9-வது சந்தாலி பழங்குடியினர் சர்வதேச மாநாடு கடந்த 7-ம் தேதி நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநில அரசு திடீரென கோசாய்பூருக்கு மாநாட்டை மாற்றியது.இதற்கிடையே, மாநாட்டில் பங்கேற்பதற்காக பாக்டோக்ரா விமான நிலையத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார். மரபுப்படி, குடியரசுத் தலைவரை வரவேற்க மாநில முதல்வரோ, அமைச்சரோ வரவேண்டும். ஆனால், முர்முவை வரவேற்க சிலிகுரி மேயர் கவுதம் தேவ் மட்டுமே வந்திருந்தார். இந்த சூழலில், மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, ‘‘முதல்வர் மம்தா பானர்ஜிஎன் மீது அதிருப்தியில் இருக்கிறாரா?’’ என்று வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையின்போது நடந்த மரபு மீறல் தொடர்பாக மேற்கு வங்க மாநில தலைமைச்செயலர் நந்தினி சக்ரவர்த்தியிடம் மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன் அறிக்கைகோரியுள்ளார். குடியரசுத் தலைவரை வரவேற்கவும், வழியனுப்பவும் முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி ஏன் வரவில்லை?
குடியரசுத் தலைவருக்காக அமைக்கப்பட்டிருந்த கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாமல் போனது ஏன்? பயணப் பாதையில் குப்பை குவிந்து கிடந்தது ஏன்? இதற்குப் பொறுப்பான டார்ஜிலிங் ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், சிலிகுரி காவல் ஆணையர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று விளக்கம் அளிக்குமாறு உள்துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)

தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 4:49:22 PM (IST)

துருக்கியில் பதுங்கியிருந்த போதைப்பாொருள் கடத்தல் மன்னன் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்தல்!
புதன் 29, ஏப்ரல் 2026 11:49:58 AM (IST)

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் விறுவிறுப்பு – காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவு!
புதன் 29, ஏப்ரல் 2026 10:29:03 AM (IST)

தெலங்கானாவில் கிரேன் சரிந்து விபத்து: பிஹார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:36:14 PM (IST)

சகோதரியின் வங்கிப் பணத்தை எடுக்க சடலத்துடன் வந்த நபர்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:24:52 PM (IST)


