» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் விறுவிறுப்பு – காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவு!
புதன் 29, ஏப்ரல் 2026 10:29:03 AM (IST)
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 142 தொகுதிகளில் நடைபெறும் இந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்களும் முதியவர்களும் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில், அதாவது காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


