» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பருவமழை தீவிரமடைந்து தொடர் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே, கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு பகுதியில் ஒரே நாளில் 320 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. மலங்கரா அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஊர்ந்தபடி செல்கின்றன.
கடைகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. புகழ்பெற்ற ஆலுவா சிவன் கோயிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்துக் கேரள முதல்வர் வி. டி. சதீஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்; 13 பேர் காயமடைந்துள்ள நிலையில் 8 பேரைக் காணவில்லை. மேலும் 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன; 196 வீடுகள் பகுதியளவாகச் சேதமடைந்துள்ளன.
வெள்ள பாதிப்பு பகுதிகளிலிருந்து 5,792 பேரை மீட்புக் குழுவினர் மீட்டு, அமைக்கப்பட்டுள்ள 209 நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தால் வீடுகள், உறவினர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் உடனடியாக வழங்கப்படும்."
12 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு எச்சரிக்கை':
கேரளாவில் இடியுடன் கூடிய மிக கனமழை தொடரும் என்பதால், அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு எச்சரிக்கை' (Orange Alert) விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


