» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 4:49:22 PM (IST)
தமிழ்நாடு, கேரளா உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோயில் இன்று (29.04.2026) நடைபெற்ற 'கங்கா விரைவுச்சாலை' தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சுமார் 594 கி.மீ நீளம் கொண்ட கங்கா விரைவுச்சாலை, மீரட் முதல் பிரயாக்ராஜ் வரையிலான 12 மாவட்டங்களை இணைக்கிறது. இதனைத் தொடங்கி வைத்த பிரதமர், எதிர்க்கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் 'குண்டும் குழியுமாக' இருந்த உத்தரப் பிரதேசம், தற்போது 'விரைவுச்சாலைகளின் மாநிலமாக' மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது: "இன்று ஜனநாயகத் திருவிழாவில் ஒரு முக்கியமான நாள். மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிடைத்த தகவல்களின்படி, முதல் கட்டத்தைப் போலவே இம்முறையும் மக்கள் அச்சமற்ற சூழலில், நீண்ட வரிசைகளில் நின்று பெருமளவில் வாக்களித்து வருகின்றனர். இது ஜனநாயகமும் அரசியலமைப்பும் இந்தியாவில் வலுப்பெற்று வருவதற்கான அடையாளம்.
சமீபத்தில் நடைபெற்ற பிஹார் தேர்தல் மற்றும் குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் பாஜக மீது பெரும் நம்பிக்கை வைத்து 80 முதல் 85 சதவீத இடங்களை வழங்கியுள்ளனர். அதேபோல, தற்போது தேர்தல் நடைபெற்றுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். மே 4-ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள், வளர்ந்த இந்தியாவுக்கான நமது பயணத்தை மேலும் வலுப்படுத்தும்" என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்லாந்திலிருந்து ரூ.11.82 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி அதிரடி கைது
சனி 13, ஜூன் 2026 12:30:17 PM (IST)

ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
சனி 13, ஜூன் 2026 11:44:11 AM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: குடியரசுத் தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வெள்ளி 12, ஜூன் 2026 4:32:09 PM (IST)

ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா: 3 மாலுமிகள் பலி - இந்தியா கண்டனம்!
வியாழன் 11, ஜூன் 2026 4:01:42 PM (IST)

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கூடாரம் சரிந்தது: ஒரே வாரத்தில் 3-ஆவது எம்பி அதிரடி ராஜிநாமா!
வியாழன் 11, ஜூன் 2026 12:39:46 PM (IST)


