» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானாவில் கிரேன் சரிந்து விபத்து: பிஹார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:36:14 PM (IST)

தெலங்கானாவில் என்சிசி பணிமனையில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் செவெல்லா எல்லைக்குட்பட்ட மகாலிங்கபுரம் கிராமத்தில் உள்ள என்சிசி பணிமனையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துகொண்டிருந்த வேளையில், மழையிலிருந்து தப்புவதற்காக கிரேனுக்கு அருகிலேயே அமைந்திருந்த ஒரு கொட்டகைக்குள் மொத்தம் 16 தொழிலாளர்கள் தங்கியிருந்தனர்.
அப்போது கிரேன் திடீரெனச் சரிந்து, அந்தக் கொட்டகையின் மீது விழுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்து செவெல்லா காவல் துணை ஆணையர் யோகேஷ் கௌதம் அளித்த தகவலின்படி, 5 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்; எஞ்சிய 11 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், சிலர் சுயநினைவின்றி (கோமா நிலையில்) இருப்பதாகவும் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் அலி ஹுசைன், நாகேந்திர சிங், சஜீம், முகேஷ் குமார் மற்றும் சோனு ராஜீபி ஆகிய அனைவரும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் துணை ஆணையர் யோகேஷ் கௌதம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

கேரளாவில் கனமழை தீவிரம்: நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி; ஆரஞ்சு அலெர்ட்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:18:23 AM (IST)

மணமக்கள் முதல் பாதிரியார் வரை அனைவரும் இரட்டையர்கள்: கேரளாவில் அபூர்வ திருமணம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தம்பதிக்கு விவாகரத்து: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:55:59 PM (IST)

முன்னாள் பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ.29 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி!
வெள்ளி 31, ஜூலை 2026 5:52:38 PM (IST)

கர்நாடகாவில் பதற்றமான சூழல்: முதல்வர் விஜய் வர வேண்டாம் - டி.கே. சிவக்குமார் கோரிக்கை!
வெள்ளி 31, ஜூலை 2026 3:30:35 PM (IST)


