» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறி; விவாதிக்க கார்கே வலியுறுத்தல்!
திங்கள் 9, மார்ச் 2026 5:14:50 PM (IST)
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் கூட்டுத் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களும் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த மோதலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கவலை தெரிவித்துள்ளன.மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போதைய சூழலில் விநியோகச் சங்கிலி அறுந்துள்ளதால், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இதன் நேரடிப் பாதிப்பாக, இந்தியாவில் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்விற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நடத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
இந்த மோதல் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நேரடியாகப் பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் மாயமாகியுள்ளதாகவும், சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வருகின்றன.
வளைகுடா நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 51 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி இந்தியாவிற்கு வருகிறது. போர் நீடித்தால் இது முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
இந்த இக்கட்டான சூழலில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் குறித்தும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் தாமாகவே முன்வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)

தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 4:49:22 PM (IST)

துருக்கியில் பதுங்கியிருந்த போதைப்பாொருள் கடத்தல் மன்னன் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்தல்!
புதன் 29, ஏப்ரல் 2026 11:49:58 AM (IST)

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் விறுவிறுப்பு – காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவு!
புதன் 29, ஏப்ரல் 2026 10:29:03 AM (IST)

தெலங்கானாவில் கிரேன் சரிந்து விபத்து: பிஹார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:36:14 PM (IST)

சகோதரியின் வங்கிப் பணத்தை எடுக்க சடலத்துடன் வந்த நபர்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:24:52 PM (IST)



srinivasanMar 9, 2026 - 05:46:54 PM | Posted IP 162.1*****