» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இலங்கை பவுலரின் ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசல்: அதிர்ச்சியில் தந்தை மரணம்!

வெள்ளி 19, செப்டம்பர் 2025 5:08:18 PM (IST)



இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே வீசிய ஒரே ஓவரில் ஆப்கன் வீரர்  5 சிக்சர்களை விளாசியதால் அதிர்ச்சியில் அவரது தந்தை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். 

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே நேற்று வீசிய கடைசி ஓவரில் ஆப்கன் வீரர் முகமது நபி தொடர்ச்சியாக 5 சிக்சர் விளாசினார். இந்த போட்டியை இலங்கையில் டிவியில் பார்த்துக்கொண்டிருந்த வெல்லாலகேவின் தந்தை சுரங்கா, மகனின் பந்துவீச்சை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதுபற்றி நேற்று போட்டி முடிந்ததும் வெல்லாலகேவிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை கேட்டு வெல்லாலகே கண்ணீர் சிந்தினார். அவருக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவர் கொழும்பு திரும்பினார். இதனால் நாளை வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory