» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ரஞ்சி டிராபி: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜம்மு-காஷ்மீர் வரலாற்று சாதனை!
புதன் 18, பிப்ரவரி 2026 5:08:29 PM (IST)

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி, ஜம்மு-காஷ்மீர் அணி தனது வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பெங்கால் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்கால் அணி தனது முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அபாரமாக விளையாடிய சுதிப் குமார் 146 ரன்கள் குவித்தார். ஜம்மு அணி தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜம்மு-காஷ்மீர் அணி 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிரடியாக விளையாடிய அப்துல் சமத் 82 ரன்கள் எடுத்தார். பெங்கால் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார்.
26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி, ஜம்மு அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் வெறும் 99 ரன்களுக்கு சுருண்டது. ஜம்மு அணியின் நபி தார் மற்றும் சுனில் குமார் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு 126 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடிய ஜம்மு-காஷ்மீர் அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது. வரும் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், ஜம்மு-காஷ்மீர் அணி கர்நாடகா அல்லது உத்தரகாண்ட் அணியை எதிர்கொள்ள உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: காலிறுதிக்கு முன்னேறிய 8 பலத்த அணிகள்; சொதப்பிய தொடர் நடத்தும் நாடுகள்!
புதன் 8, ஜூலை 2026 12:30:43 PM (IST)

இங்கிலாந்திடம் படுதோல்வி : 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இந்தியா மோசமான சாதனை!
புதன் 8, ஜூலை 2026 11:33:11 AM (IST)

இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம் - பிரப்சிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:03:26 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை நட்சத்திர அணியில் ஆஸி ஆதிக்கம்: இந்தியாவிலிருந்து தேர்வான ஸ்ரீ சரணி!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:26:31 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: கால்இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:58:47 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி நார்வே வெற்றி - முதன்முறையாகக் காலிறுதிக்குத் தகுதி!
திங்கள் 6, ஜூலை 2026 11:51:51 AM (IST)


