» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:25:25 AM (IST)

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, ஹேட்ரிக் வெற்றியுடன் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.
இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் (10 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசி அதிரடி காட்டினார். சூர்யகுமார் யாதவ்32 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 25 ரன்களும், ஷிவம் துபே 27 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் சைம் அயூப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
176 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. தொடக்க வீரர் சாகிப்ஸாதா (0), கேப்டன் சல்மான் அலி ஆகா (4), பாபர் அசம் (5) என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக உஸ்மான் கான் 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியத் தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.
புள்ளிகள் பட்டியல் நிலை: இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து 'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது. முதல் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, அடுத்த சுற்றைத் தீர்மானிக்க வரும் 18-ம் தேதி நமீபியாவுடன் மோதவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: காலிறுதிக்கு முன்னேறிய 8 பலத்த அணிகள்; சொதப்பிய தொடர் நடத்தும் நாடுகள்!
புதன் 8, ஜூலை 2026 12:30:43 PM (IST)

இங்கிலாந்திடம் படுதோல்வி : 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இந்தியா மோசமான சாதனை!
புதன் 8, ஜூலை 2026 11:33:11 AM (IST)

இந்திய அணியிலிருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம் - பிரப்சிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு!
செவ்வாய் 7, ஜூலை 2026 12:03:26 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை நட்சத்திர அணியில் ஆஸி ஆதிக்கம்: இந்தியாவிலிருந்து தேர்வான ஸ்ரீ சரணி!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:26:31 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: கால்இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:58:47 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: பிரேசிலை வீழ்த்தி நார்வே வெற்றி - முதன்முறையாகக் காலிறுதிக்குத் தகுதி!
திங்கள் 6, ஜூலை 2026 11:51:51 AM (IST)


