» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெற்றியை கொண்டாட ரோடு ஷோ தேவையில்லை: கவுதம் காம்பீர் கருத்து

வெள்ளி 6, ஜூன் 2025 10:08:24 AM (IST)

பலரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெற்றி கொண்டாட்டங்களை மைதானத்திற்குள் நடத்தலாம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது குறித்து அவர் கூறியதாவது: அனைத்தையும் விட உயிர் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதை சொல்வேன். எதிர்காலத்தில் ரோடு ஷோ நடத்தும் போது இன்னும் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வெற்றி கொண்டாட்டங்களை மூடிய கதவுகளுக்குள் அல்லது மைதானத்திற்குள் நடத்தலாம்.

உயிரிழந்தவர்கள் நினைவாக எனது எண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் இப்படி நடக்கக்கூடாது. பேரணியை நடத்தி இருக்கவும் கூடாது. என்னை பொறுத்தவரை ரோடு ஷோ நடத்தி இருக்கக்கூடாது.வெற்றிக்காக ரோடு ஷோ நடத்துவதில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கையில்லை. இவ்வாறு கவுதம் காம்பீர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory