» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில், டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற வாய்ப்பில்லை தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம்தேதி முதல் 28-ம்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ம் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ம் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ம் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியில், டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் , ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற வாய்ப்பில்லை தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடுவதால் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதே போல் 15 பேர் கொண்ட அணியில் அதிரடி வீரர் ரிங்கு சிங்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆடும் ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் ஆசிய போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை குத்துச்சண்டை பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடம் : பிரதமர் வாழ்த்து
திங்கள் 24, நவம்பர் 2025 5:29:45 PM (IST)

கவுகாத்தி டெஸ்டில் வலுவான நிலையில் தென்ஆப்பிரிக்கா: இந்தியா 201 ரன்னில் ஆல்-அவுட்
திங்கள் 24, நவம்பர் 2025 4:21:28 PM (IST)

பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
திங்கள் 24, நவம்பர் 2025 12:41:54 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்!
சனி 22, நவம்பர் 2025 5:02:44 PM (IST)

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: அபார வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா..!
சனி 22, நவம்பர் 2025 4:31:08 PM (IST)

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள் வீழ்ச்சி: 100 ஆண்டு ஆஷஸ் வரலாற்றில் முதல் முறை..!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:25:58 PM (IST)


.gif)