» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு

செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

ஆசிய கோப்பை தொடர்கான சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய பும்ராவும், ஆசிய கோப்பை தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார். தொடக்க வீரர்களாக அபிஷேக்சர்மா, சஞ்சு சாம்சன், சுப்மன் கில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று நடுவரிசையில் திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், சிவம் துபே போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சுழற் பந்துவீச்சாளர்களாக அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் என மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் படையில் பும்ரா, ஆர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரின் பெயரையும் பிசிசிஐ பரிசீரிக்கவில்லை. 

தற்போது கில் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவாரா இல்லை சஞ்சு சாம்சன் தான் அந்த பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணி விவரம்: 1. சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), 2.சுப்மன் கில் (துணை கேப்டன்), 3.திலக் வர்மா, 4. சஞ்சு சாம்சன், 5. அபிஷேக் சர்மா, 6. ஹர்திக் பாண்டியா, 7.சிவம் துபே, 8. ரிங்கு சிங், 9.பும்ரா, 10. ஆர்ஸ்தீப் சிங், 11. ஹர்சித் ரானா, 12. வருண் சக்கரவர்த்தி, 13. அக்சர் பட்டேல், 14. ஜித்தேஷ் சர்மா, 15. குல்தீப் யாதவ்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory