» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)



ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர், டிசம்பருக்கு பிறகு தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இலங்கை அணியின் மஹீஷ் தீக்‌ஷனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு இடங்கள் பின்தங்கி முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர். டாப் 10-ல் குல்தீப் யாதவை தவிர இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெற்றுள்ளார். அவர் 616 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஜெய்டன் சீல்ஸ் தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திரமான ஷுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஸ்ரேயஸ் ஐயர் 6-வது இடத்தில் உள்ளார்.

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா, திலக் வர்மா முதல் இரு இடங்களில் உள்ளனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் டெவால்ட் பிரேவிஸ் 9 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory