» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நார்வே செஸ் தொடர் குகேஷிடம் தோல்வி: கார்ல்சன் ஆக்ரோஷம்!
செவ்வாய் 3, ஜூன் 2025 12:15:54 PM (IST)

நார்வே செஸ் தொடர் போட்டியில் உலக சாம்பியன் குகேஷிடம் தோல்வி அடைந்த கார்ல்சன் ஆக்ரோஷமாக 'டேபிளில்' ஓங்கி குத்தினார்.
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. ஆறாவது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 19, (நம்பர்-5), ஐந்து முறை உலக சாம்பியன் ஆன உலகின் 'நம்பர்-1' வீரர், நார்வேயின் கார்ல்சனை 34, எதிர்கொண்டார். போட்டியின் 52 வது நகர்த்தலில் கார்ல்சன் தவறு செய்ய, போட்டி குகேஷ் பக்கம் திரும்பியது.
நான்கு மணி நேரம் நடந்த இப்போட்டியில், குகேஷின் 62வது நகர்த்தலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கார்ல்சன். போட்டியில் தனது தோல்வி உறுதியானது எனத் தெரிந்ததும், ஆக்ரோஷமாக 'டேபிளில்' ஓங்கி குத்தினார். பின் சுதாரித்த கார்ல்சன், குகேஷிடம் கைகொடுத்து விட்டு, வெளியேறினார். நீண்ட நேரம் விளையாடப்படும் 'கிளாசிக்' முறையிலான செஸ் போட்டியில் குகேஷ், முதன் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார்.
இந்நிலையில் கார்ல்சனுக்கு பதிலடி தரும் வகையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) வெளியிட்ட செய்தியில்,' நீங்கள் ராஜாவுடன் (உலக சாம்பியன்) மோதும் போது, உங்களது சிறந்த ஆட்டத்தை தவற விடக் கூடாது,' என தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் பிடித்தார்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:38:17 PM (IST)

ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 9:00:01 PM (IST)

தூத்துக்குடியில் டி-20 கிரிக்கெட்: டிசிடபிள்யூ அணி கோப்பையை வென்றது.
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 7:26:18 PM (IST)

ஆசிய கோப்பை: இந்திய அணியில் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
சனி 16, ஆகஸ்ட் 2025 5:51:00 PM (IST)

பாகிஸ்தானை வீழ்த்தி 34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மே.இ.தீவுகள் அணி சாதனை!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:03:05 AM (IST)

ஜூனியர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு 14 பதக்கம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 12:33:46 PM (IST)
