» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ல் மீண்டும் தொடக்கம் : அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 13, மே 2025 12:45:07 PM (IST)

போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் என கூறப்படுகிறது.
ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். இதில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.
ப்ளே ஆஃப் சுற்று விவரங்கள்:
குவாலிபையர் 1 - மே 29
எலிமினேட்டர் - மே 30
குவாலிபையர் 2 - ஜூன் 1
இறுதிப் போட்டி - ஜூன் 3 ஆம் தேதி முறையே நடக்க உள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு : விராட் கோலி அறிவிப்பு
திங்கள் 12, மே 2025 4:45:32 PM (IST)

போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : ரோகித் சர்மா அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 12:39:00 PM (IST)

உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

மும்பை அணியை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
புதன் 7, மே 2025 3:46:04 PM (IST)

ஐசிசி ஒன்டே, டி20 தரவரிசையில் இந்தியா முதலிடம்!
செவ்வாய் 6, மே 2025 12:53:13 PM (IST)
