» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடர்ச்சியாக 6 வெற்றிகள் : முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை

வெள்ளி 2, மே 2025 12:45:12 PM (IST)



ஐபிஎல் நடப்பு தொடரில் மும்பை அணி தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று முதல் இடத்திற்கு முன்னேறியது. 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியனஸ் அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது: நாங்கள் அனைவரும் சாதாரணமான கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். இது எங்களுக்கு வேலை செய்கிறது, அதிலேயே தொடர்வோம் என நினைக்கிறேன்.நாங்கள் மிகவும் தன்னடக்கமாகவும் ஒழுக்கமாகவும் போட்டியில் முழு கவனமாகவும் இருக்க விரும்புகிறேன். நாங்கள் கூடுதலாக 15 ரன்களை பெற்றிருக்கலாம். 

நானும் சூர்யாவும் பேசிக்கொண்டது என்னெவென்றால் குறைவான ரிஸ்க் உள்ள ஷாட்டுகளை ஆட வேண்டுமென்பதே. ஒவ்வொரு ஷாட்டுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டோம். ரோஹித் சர்மாவும் ரியான் ரிக்கல்ட்டும் அதேமாதிரிதான் விளையாடினர். இது முற்றிலும் சிறப்பானது. இதில் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதான் என்பதைப் பொறுத்ததல்ல, அந்தச் சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதே முக்கியமானது. 

வீரர்கள் மீண்டும் தங்களது பேட்ஸ்மேன்ஷிப்புக்கு (திறமை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆடுவது) திரும்புகிறார்கள். அணியாக நாங்கள் சரியான பேட்மேன்ஷிப்பில் விளையாடுகிறோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory