» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளிகளில் முழுமையான வானவியல் பாடத்திட்டம் தேவை: தமிழக அரசுக்கு டாஸ் பொதுக்குழு வலியுறுத்தல்!

ஞாயிறு 12, ஜூலை 2026 6:58:49 PM (IST)

ssdmAstro.jpg

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோளரங்கங்களை உருவாக்கவும், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையான வானவியல் பாடத்திட்டத்தை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தித் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி (டாஸ்) மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமைப்பின் மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்து முருகன், டாஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாஸ் மாநிலச் செயலாளர் சாந்தி வருகை தந்தவர்களை வரவேற்றார்.

கூட்டத்தில் டாஸ் மாநிலப் பொதுச்செயலாளர் மனோகர் கலந்துகொண்டு, பல்வேறு மாவட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசித்தார். தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் முக்கியத் தீர்மானங்களை அவர் வாசித்தார்: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவீனக் கோளரங்கங்களை அரசு உருவாக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையான வானவியல் பாடத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.மாணவர்களின் கவனத்தை அறிவியல், கணிதத்தின் மீது ஈர்க்கும் வகையில், கோவையில் நடைபெறவுள்ள இளையோர் வானவியல், விண்வெளி அறிவியல் மாநாட்டில் கல்லூரி மாணவர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்திப் பொதுக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்விழாவில் டாஸ் மாநிலத் துணைத் தலைவர் சக்திவேல், மாநிலச் செயலாளர்கள் சிந்தியா, நித்யா உட்படச் சென்னை, திருவள்ளூர், விருதுநகர், திருச்சி, மதுரை, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாகத் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் துணைத் தலைவர் கமலா ராணி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory