» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:40:55 AM (IST)
மாமல்லபுரம் அருகே ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது மின்கம்பியில் இரும்புக் குழாய் உரசியதால் மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் விடுதியில் குடிநீர்ப் பிரச்சினைக்காக 40 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. இப் பணியில் நெய்குப்பியைச் சேர்ந்த பிரபு, வசந்தபுரியைச் சேர்ந்த பாலாஜி, மாமல்லபுரத்தைச் சேர்ந்த பாட்ஷாபாய், கடம்பாடியைச் சேர்ந்த ராஜேந்திரன், காரணையைச் சேர்ந்த பகவான் ஆகிய ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
40 அடி ஆழத்தில் ஆழ்துளை தோண்டும் பணி முடிந்தவுடன், இரும்புக் குழாயை ஐந்து பேரும் ஒன்றாக மேலே தூக்கியுள்ளனர். அப்போது இரும்புக் குழாய் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர்அழுத்த மின்கம்பி மீது உரசியது.
மின்சாரம் தாக்கியதில் ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பிரபு, பாலாஜி, பாட்ஷாபாய், ராஜேந்திரன் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பகவான் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இப் பேரிடர் விபத்து குறித்துத் தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், திருப்போரூர் எம்.எல்.ஏ. விஜயராஜ், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பாலாஜி சம்பவ இடத்தைப் பார்வையிட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? கோழி வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:55:48 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

திமுகவினர் ஓடி ஒளிபவர்கள் அல்ல: அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 12, ஜூலை 2026 9:20:58 AM (IST)

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)


