» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் குடிபோதையில் டேங்கர் லாரி ஓட்டிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு – உரிமம் ரத்து!
வியாழன் 26, மார்ச் 2026 3:39:54 PM (IST)

தூத்துக்குடியில் மதுபோதையில் அபாயகரமாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த நபர் மீது போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவுப்படி, நகர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் மேற்பார்வையில், நகரப் போக்குவரத்து காவல் துறையினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். துறைமுகச் சாலை மற்றும் திருச்செந்தூர் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் வந்த டேங்கர் வகை கனரக வாகனத்தை நிறுத்திப் சோதித்தபோது, அதனை ஓட்டி வந்த உழக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மதுபோதையில் இருப்பது மூச்சுப் பரிசோதனைக் கருவி மூலம் கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஓட்டி வந்த டேங்கர் லாரி உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றம் மூலம் சுமார் ₹15,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஓட்டுநர் ஆறுமுகத்தின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தர மாட்டோம் : சீமான் பிரச்சாரம்!
வியாழன் 26, மார்ச் 2026 4:39:58 PM (IST)

சமூக ஊடகங்களில் கண்ணியம் காக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 4:14:26 PM (IST)

தவெக விழாவில் நடனமாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்: : கல்வி அலுவலர் நடவடிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 4:06:05 PM (IST)

பங்குனி உத்திரம்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 3:29:27 PM (IST)

ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வியாழன் 26, மார்ச் 2026 11:04:20 AM (IST)

மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 10:54:26 AM (IST)

