» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி: ஆட்சியர் நேரில் ஆய்வு!

வியாழன் 26, மார்ச் 2026 10:54:26 AM (IST)



சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடியில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 15.03.2026 அன்று வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பணிகளைச் செம்மையாக மேற்கொள்ளும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், தலைமை தாங்கி இப்பயிற்சியினை வழங்கினார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு வரும் 28.03.2026 அன்று அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்டமாக நடைபெற்ற இன்றைய பயிற்சியில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 153 மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில் தேர்தல் நாளன்று மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியப் பணிகள். வாக்குச்சாவடி அலுவலர்கள் கையாள வேண்டிய தேர்தல் தொடர்பான படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்தல். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்கள் வழங்கினார். 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்), மி. பிரபு (தூத்துக்குடி),  ரா. கௌதம் (திருச்செந்தூர்), செந்தில்வேல்முருகன் (ஸ்ரீவைகுண்டம்), சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்), திரு. ஹிமான்ஷு மங்கள், (கோவில்பட்டி) மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory