» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதையில் தந்தையின் கடைக்கு தீவைத்த மகன்: பக்கத்து கடையும் எரிந்து ரூ.7 லட்சம் நாசம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:45:37 AM (IST)
கருங்குளம் பகுதியில், மதுபோதையில் தந்தையின் பழைய இரும்பு கடைக்கு மகனே தீ வைத்த சம்பவத்தில், அருகில் இருந்த மளிகை கடையும் எரிந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அரசு மருத்துவமனை அருகே தங்கசாமி என்பவர் பழைய இரும்பு கடையும், ரகு சரவணன் என்பவர் மளிகை கடையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, தங்கசாமியின் மகன் வெற்றிவேல் (36) மதுபோதையில் தனது தந்தையின் இரும்பு கடைக்குத் தீ வைத்துள்ளார்.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த ரகு சரவணனின் மளிகை கடைக்கும் தொற்றியது. இதில் கடையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
செய்துங்கநல்லூர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வெற்றிவேலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தந்தையின் கடைக்கு மகனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிபோதையில் டேங்கர் லாரி ஓட்டிய ஓட்டுநர் கைது : உரிமம் ரத்து - வாகனம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 3:39:54 PM (IST)

பங்குனி உத்திரம்: தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 3:29:27 PM (IST)

ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வியாழன் 26, மார்ச் 2026 11:04:20 AM (IST)

மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 10:54:26 AM (IST)

தமிழக சட்டசபை தேர்தல்: மார்ச் 30 முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்; ஏப்ரல் 6 கடைசி நாள்
வியாழன் 26, மார்ச் 2026 10:19:29 AM (IST)

சுவர் மீது கார் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலி: மனைவி குழந்தைகள் காயம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:51:13 AM (IST)

