» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக சட்டசபை தேர்தல்: மார்ச் 30 முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்; ஏப்ரல் 6 கடைசி நாள்
வியாழன் 26, மார்ச் 2026 10:19:29 AM (IST)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டசபைக்கு, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ஆம் தேதி அறிவித்தது. அதன் முக்கிய தேதிகள் பின்வருமாறு:தேர்தல் தேதி: ஏப்ரல் 23, 2026
வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026
தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை மார்ச் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. அன்று முதல் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை.
கடைசி நாள்: ஏப்ரல் 06, 2026 (திங்கட்கிழமை).
விடுமுறை நாட்கள்: 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் (Negotiable Instruments Act), பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள பின்வரும் நாட்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இயலாது:
மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) - தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 01 (புதன்கிழமை) - வங்கிகள் கணக்கு முடிப்பு நாள்
ஏப்ரல் 03 (வெள்ளிக்கிழமை) - புனித வெள்ளி
ஏப்ரல் 05 (ஞாயிற்றுக்கிழமை)
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தன்று உள்ளூர் விடுமுறை அளிக்க இந்து முன்னணி கோரிக்கை!
வியாழன் 26, மார்ச் 2026 3:29:27 PM (IST)

ஓசியில் சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு: இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வியாழன் 26, மார்ச் 2026 11:04:20 AM (IST)

மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 26, மார்ச் 2026 10:54:26 AM (IST)

சுவர் மீது கார் மோதிய விபத்தில் ராணுவ வீரர் பலி: மனைவி குழந்தைகள் காயம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:51:13 AM (IST)

போதையில் தந்தையின் கடைக்கு தீவைத்த மகன்: பக்கத்து கடையும் எரிந்து ரூ.7 லட்சம் நாசம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:45:37 AM (IST)

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி: மென்பொருள் பொறியாளர், நண்பர் கைது!
வியாழன் 26, மார்ச் 2026 8:41:00 AM (IST)

