» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக விழாவில் நடனமாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்: : கல்வி அலுவலர் நடவடிக்கை!

வியாழன் 26, மார்ச் 2026 4:06:05 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், நடிகர் விஜய்யின் பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பின்னையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அத்துடன், வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியையாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரத்தநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, மேடையில் உற்சாகமாக நடிகர் விஜய்யின் சினிமா பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் நடனமாடிய காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களது கைபேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

அரசுப் பணியில் இருந்துகொண்டு, அரசியல் கட்சி விழாவில் பங்கேற்று நடனமாடியது ஆசிரியர் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனப் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்திய பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன், ஒழுங்கு நடவடிக்கை காரணமாகத் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியைப் பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் தஞ்சை மாவட்ட கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory