» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:10:28 AM (IST)

திருநெல்வேலியில் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், துவக்கி வைத்து, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. சுகுமார் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வஹாப் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தார்கள்
தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செயல்படுத்துவதன் காரணமாக இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போலியோ நோய் தாக்கம் இல்லாமல் உள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்தியாவில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஒரே தவணையாக சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும், இடம்பெயர்ந்து வாழும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் மற்றும் செங்கல் சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், மேலும் புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் மொத்தம் 964 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது, மேற்கண்ட மையங்களில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட சுமார் 1.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் அவர்களுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விடுபட்ட குழந்தைகளுக்கு பின்வரும் 7 நாட்களும் பணியாளர்கள் வீடுவீடாக சென்று பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்மையங்களில் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் 710 பணியாளர்களும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 63 பேர்களும் சத்துணவுப் பணியாளர்கள் 1842 நபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் 1494 பேர்களும் மொத்தம் 4109 பணியாளர்கள் நமது மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து பணியாற்றுகின்றனர்.
இது தவிர இதர அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்புடன் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாமில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜயசந்திரன், உடன் மருத்துவர்கள் செவிலியர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில்வாரியான நலவாரியங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம்: அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை!
திங்கள் 13, அக்டோபர் 2025 12:12:22 PM (IST)

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அரசு அவசரம் காட்டக்கூடாது: ராமதாஸ்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:08:23 AM (IST)

இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திங்கள் 13, அக்டோபர் 2025 11:00:35 AM (IST)

முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடா? ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
திங்கள் 13, அக்டோபர் 2025 8:46:05 AM (IST)

சொத்துத் தகராறில் ஒருவர் குத்திக் கொலை: 4பேர் கைது!
திங்கள் 13, அக்டோபர் 2025 8:01:57 AM (IST)

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)
