» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)
108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதற்கான காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவசர மருத்துவ உதவிக்காக தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.
இதற்கிடையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் மேம்பால கட்டுமான பணிகள் இதர சாலை பணிகள் காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து செல்வதற்கு காலதாமதம் ஏற்படும் சூழல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதற்கான காத்திருப்பு நேரம் சராசரியாக 7.57 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட இடங்கள், குடிசைப் பகுதிகள் போன்றவை ஹாட் ஸ்பாட்டுகளாக கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கையாக 108 ஆம்புலன்ஸ்-கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் கட்டளை மையத்திற்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தை அணுகிட வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத்தை தெரிவித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் 5 நிமிடங்களிலும், செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடங்களிலும், பிற மாவட்டங்களில் 8 நிமிடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடா? ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
திங்கள் 13, அக்டோபர் 2025 8:46:05 AM (IST)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி: தூத்துக்குடி போலி எஸ்ஐ உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:16:48 AM (IST)

நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என கருத வேண்டாம்: டிடிவி தினகரன் பேட்டி
சனி 11, அக்டோபர் 2025 5:44:12 PM (IST)

ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
சனி 11, அக்டோபர் 2025 5:07:21 PM (IST)

அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருது :மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சனி 11, அக்டோபர் 2025 4:28:28 PM (IST)

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 11, அக்டோபர் 2025 4:20:34 PM (IST)
