» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என கருத வேண்டாம்: டிடிவி தினகரன் பேட்டி
சனி 11, அக்டோபர் 2025 5:44:12 PM (IST)
கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.

தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.
இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடா? ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
திங்கள் 13, அக்டோபர் 2025 8:46:05 AM (IST)

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி: தூத்துக்குடி போலி எஸ்ஐ உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:16:48 AM (IST)

ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
சனி 11, அக்டோபர் 2025 5:07:21 PM (IST)

அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருது :மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சனி 11, அக்டோபர் 2025 4:28:28 PM (IST)

சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 11, அக்டோபர் 2025 4:20:34 PM (IST)
