» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சொத்துத் தகராறில் ஒருவர் குத்திக் கொலை: 4பேர் கைது!
திங்கள் 13, அக்டோபர் 2025 8:01:57 AM (IST)
பழையகாயல் அருகே முன்விரோதத்தில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (49), பழையகாயலில் உள்ள தனியார் குடியிருப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வளர்மதி, தூத்துக்குடியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.
செல்வகுமாருக்கும் அவரது அண்ணன் விஜயகுமார் குடும்பத்துக்குமிடையே சொத்துத் தகராறு இருந்ததாம். ஓராண்டுக்கு முன்பு செல்வகுமாரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை விஜயகுமாரின் மகன்கள் சேதப்படுத்தியதால், அவர் ஆத்திரமடைந்து விஜயகுமாரின் மனைவி விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம். அதனால், முன்விரோதம் மேலும் வளர்ந்ததால், செல்வகுமார் தனது குடும்பத்தினருடன் பழையகாயலில் குடியேறினார்.
இதனிடையே, அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோவங்காட்டில் குடியேறியதுடன், அங்கிருந்து வேலைக்குச் சென்றுவந்தார். நேற்று முன்தினம் அவர் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பியபோது, பழையகாயல்-கோவங்காடு விலக்கில் ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாம். இதில், காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து டிஎஸ்பிக்கள் மகேஷ்குமார் (திருச்செந்தூர்), நிரேஸ் (ஸ்ரீவைகுண்டம்), ஆத்தூர் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெறுகிறது.
இந்த நிலையில், செல்வகுமார் கொலை தொடர்பாக தூத்துக்குடி தெற்கு கோவங்காடு தெற்கு தெரு விஜய குமார் மகன் ராஜேஷ் குமார் 25, சேர்வைகரன் மேடம், சிவஞான புரம் மகன் பாலா முகேஷ் 21, சிவகங்கா புரம் மாஷானா முத்து மகன் பாலா விக்னேஷ் 19, தங்கம்மாள் புரம் வீரமணி மகன் சபரிவாசன் 20 ஆகிய 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில்வாரியான நலவாரியங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம்: அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை!
திங்கள் 13, அக்டோபர் 2025 12:12:22 PM (IST)

தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்: ஆட்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:10:28 AM (IST)

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அரசு அவசரம் காட்டக்கூடாது: ராமதாஸ்
திங்கள் 13, அக்டோபர் 2025 11:08:23 AM (IST)

இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
திங்கள் 13, அக்டோபர் 2025 11:00:35 AM (IST)

முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடா? ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
திங்கள் 13, அக்டோபர் 2025 8:46:05 AM (IST)

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான காத்திருப்பு நேரம் மேலும் குறைப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு
ஞாயிறு 12, அக்டோபர் 2025 7:38:56 PM (IST)
