» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எடுத்து கேஸ் தயாரிப்பு: தமிழக விஞ்ஞானி அசத்தல்!!
சனி 20, செப்டம்பர் 2025 5:05:44 PM (IST)

தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கண்டறிந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வஞ்சிபாளையம் முருகம்பாளையத்தில் ஹன்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எரிவாயுவை பிரித்தெடுத்து, சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார்.
‘ஹன்க் காஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு அறிமுக நிகழ்ச்சி, அவிநாசி அருகே நேற்று நடந்தது. முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் நடிகரும், ஹன்க்காஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குநருமான சரத்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் ஆகியோர் பங்கேற்று, புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் கூறியதாவது: இயற்கையான முறையில், கார்பன் இல்லாத நிலையில் தண்ணீரை கொண்டு, அதிலிருந்து கிரீன் ஹைட்ரஜன் மூலம் நெருப்பை உருவாக்கி இதை தயாரித்துள்ளேன். சுமார் 20 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக இது சாத்தியப்பட்டுள்ளது. கார்பன் இல்லாத எரிபொருளாகவும், மிகவும் பாதுகாப்பானதாகவும் இது உள்ளது.
நாம் பயன்படுத்தும் ஒரு லிட்டர் குடிநீரில், 1,225 லிட்டர் ஹைட்ரஜன் எடுக்கலாம். இந்த ஹைட்ரஜனை கைராய்டு எலட்ரோலைட் மெம்ப்ரைன் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்து, அதை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் இருந்து பெறப்படும் காஸை, ஒரு குடும்பம் ஒரு மாத சமையலுக்கு பயன்படுத்தலாம்.
இதற்கான இயந்திரங்கள் இன்றைய நிலையில் ரூ.40 ஆயிரமாகும். இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக அங்கீகாரம் கோரி, மத்திய அரசிடம் விண்ணப்பித்ததுடன், மத்திய அரசின் எரிசக்தி துறையினரை சந்தித்து பல மணி நேரம் எடுத்துரைத்து, செயல்விளக்கங்களையும் காட்டியுள்ளோம்” என்றார்.
நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான நடிகர் சரத்குமார் கூறும்போது, "இந்த காஸ் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும். அங்கீகாரம் தொடர்பாக மத்திய அரசின் எரிசக்திதுறை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். இதை வீடுகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களிலும் பயன்படுத்தலாம்.
இந்த கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டால், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முன்னொரு காலத்தில் ரயில், விமானம் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் சந்தேகத்தோடு பார்த்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டனர். அதேபோல, இந்த எரிபொருள் மாற்றமும் ஆரம்பத்தில் கேள்விகளை எழுப்பினாலும், விரைவில் மக்கள் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள்: சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
சனி 20, செப்டம்பர் 2025 5:53:28 PM (IST)

நான் ஒன்றும் தனி ஆள் கிடையாது; தேர்தலில் மோதி பார்ப்போம்: திமுகவுக்கு விஜய் சவால்
சனி 20, செப்டம்பர் 2025 3:52:29 PM (IST)

தமிழில் 100 மதிப்பெண்கள் எடுத்தால் 10ஆயிரம் ஊக்கத்தொகை : அன்பில் மகேஷ் அறிவிப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:32:53 PM (IST)

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நேரம் குறைப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:21:52 PM (IST)

ஜிஎஸ்டி வரிகுறைப்பு என்பது மாற்றம் அல்ல புரட்சி : நிர்மலா சீதாராமன் பேச்சு
சனி 20, செப்டம்பர் 2025 12:55:47 PM (IST)

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை
சனி 20, செப்டம்பர் 2025 12:39:46 PM (IST)
