» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை
சனி 20, செப்டம்பர் 2025 12:39:46 PM (IST)
குலசேகரன்பட்டினத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் சுப்பையா மனைவி பார்வதி (23), இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் மகன் வேலுச்சாமி (28). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்களாம். இந்நிலையில் இருவரும் இன்று காலை நெல்லையில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பின்னர் இருவரும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளனர். பின்னர் மனம் மாற்றம் ஏற்பட்டு, 2பேரும் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று தாங்கள் விஷம் அருந்தி விட்டதாகவும் எங்களை காப்பாற்றுமாறும் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை ஆட்டோ மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் ஜோடியான இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
ரொனால்டோSep 20, 2025 - 12:57:51 PM | Posted IP 162.1*****
கள்ளக்காதல் செய்தி போட ஆர்வமும் நேரமும் இருக்குற உங்களுக்கு, இளைஞர்களின் விளையாட்டு நிகழ்வை செய்தியாக்க கெஞ்சினாலும் மனமிரங்கி செய்தியாக்குவதில்லை.
மேலும் தொடரும் செய்திகள்

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க நேரம் குறைப்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:21:52 PM (IST)

அரசு பள்ளி மாணவர்கள் நமது பெருமையின் அடையாளம் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சனி 20, செப்டம்பர் 2025 12:22:29 PM (IST)

காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய் அமைவிட வரைபடம் கண்டுபிடிப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 11:48:07 AM (IST)

காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற வாலிபர்: குடும்பத்தகராறில் பயங்கரம்!!
சனி 20, செப்டம்பர் 2025 8:53:03 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 8:25:26 AM (IST)

தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர்: மனநல மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:20:34 PM (IST)

குடிமகன்Sep 20, 2025 - 01:06:40 PM | Posted IP 104.2*****