» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய் அமைவிட வரைபடம் கண்டுபிடிப்பு!

சனி 20, செப்டம்பர் 2025 11:48:07 AM (IST)


தூத்துக்குடி மாவட்டம் பனையூர் போன்று காயல்பட்டினம் பகுதியில் சுமார் 5.4கி.மீ விட்டம் கொண்ட கடல்நீர் உட்புகும் கால்வாய் உடன் அமைந்திருந்த குளத்தின் அமைவிடம் வரைபடம் வாயிலாக கண்டறிய பட்டுள்ளது.

இதுகுறித்து வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது: திரு.இராபர்ட் ஓரம் வரைந்த 1778ம் ஆண்டு இராணுவப் பரிவர்த்தனை வரைபடத்தினை அட்ச ரேகை, தீர்க்க ரேகை அடிப்படையில்(DMS Method) தூரங்கள் கணக்கீட்டு(Great Circle distance between two DMS co-ordinates) முறையில் பகுப்பாய்வு செய்ததில் தூத்துக்குடி மாவட்டம், தெற்கு குளத்தூர் அருகே உள்ள பனையூர் பனையூர் குளத்தை விட பெரியது(5.4கி.மீ விட்டம்) கொண்டதாக கடலில் இருந்து 9.5கி.மீ தூரத்தில் நாலுமாவடி - புதுக்குடி பகுதிகளை மையமாக வைத்து இருந்து உள்ளது புலனாகிறது.

(செயற்கை கோள் வரைபட பார்வைக்கு இணைப்பு: https://earth.google.com/earth/d/1LnThLG7wR9f50m_1o7SiJ4zaMzyYWhIY?usp=sharing)  இந்த நதியின் வரைபடம் வாயிலாக பார்த்தால், ஆத்தூர் வழித்தடம் பின்னர் உருவான உண்மை புலனாகும். இதனால் தான் ஆத்தூர் பகுதியில் இன்றுவரை அதிக அளவிலான தொன்மங்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது வரலாற்று சான்றுகள் ஆகும்.
 
இந்த குளத்தின் உட்பகுதியில் புதுக்குடி, அருஞ்சுனனை ஆகிய பகுதிகளும், கிழக்கு கரை பகுதியில் மூலக்கரை, புதுக்குளம் போன்ற பகுதிகளையும், தென்கரையில் மூலைப்பொழி, சோனகர்விளை என்ற பகுதிகளையும் நம்மால் காணமுடிகிறது. இந்த குளத்தின் பகுதியின் மேற்கே தான் மண்ணூர் என வரைபடத்தில் குறிப்பிடப்பட்ட தேரிக்காடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது ஆகும். வடக்கு கரை பகுதியில் வரண்டியவேல், அங்கமங்கலம் போன்ற பகுதிகளையும் காணமுடிகிறது


குறிப்பாக காயல்பட்டினம் சிங்கித்துறை கடற்கரை பகுதிக்கு வடக்கே இருந்து மேற்கு நோக்கி சாகுபுரம் வழியாக கடல்நீர் கால்வாய் வழித்தடத்தின் எச்சங்களை இன்றும் நம்மால் காணமுடிகிறது. எனவே தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இன்றைய அக்காசாலை பகுதியில் கொற்கை எனப்படும் துறைமுகம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை எனலாம்.

இத்தகைய கீழக்கரை, கீழ் பட்டினம் (பட்டினம் மருதூர்), காயல்பட்டினம் போன்ற மூன்று பகுதிகளில் முன்பு காணப்பட்ட மிகப்பெரிய குளங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பகுதிதான் கொற்கை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இத்தகைய அமைப்பில் வேறு எந்தப் வணிக பகுதிகளிலும் குளங்களை காணப்படவில்லை என்பது முத்து விளைவிக்கும் வித்தையின் மூலக்கூறாக இந்த குளங்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும் எனலாம் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory