» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர்: மனநல மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:20:34 PM (IST)

சென்னையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர் போலீஸ் விசாரணைக்கு பின்னர், அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை - நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம். இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அந்த இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தது மதுராந்தகத்தை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. இவர் விஜய் வீட்டின் பின் பக்கம் உள்ள சிறிய கேட் வழியாக பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினமே உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. விஜயை பார்க்க இரவு முழுவதும் மாடியின் மீது உணவின்றி பதுங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
விஜய்யை பார்த்ததும், அருண் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதும், அவரை தரைத்தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் விஜய் ஒப்படைத்ததும் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய் அமைவிட வரைபடம் கண்டுபிடிப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 11:48:07 AM (IST)

காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற வாலிபர்: குடும்பத்தகராறில் பயங்கரம்!!
சனி 20, செப்டம்பர் 2025 8:53:03 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 8:25:26 AM (IST)

தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: நாளை முன்பதிவு துவக்கம்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:07:41 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:43:09 PM (IST)
