» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காப்பகத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை!!
புதன் 10, செப்டம்பர் 2025 10:48:14 AM (IST)
காப்பகத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் கூனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (50). பாதிரியாரான இவர், அப்பகுதியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகம் நடத்தி வந்தார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளை இந்த காப்பகத்தில் தங்க வைத்து அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்தார்.
இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த காப்பகத்தில் தங்கி படித்த, 14 வயது சிறுமிக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி உடல்நலக்குறைவால் வீட்டுக்கு சென்று, தனது தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார், ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் அளித்தார்.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்ட்ரூசை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது காப்பகத்தில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் ஆண்ட்ரூசுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவமனையில் தந்தையை மகன் இழுத்துச் சென்ற சம்பவம்: ஊழியர்கள் சஸ்பெண்ட்!
புதன் 10, செப்டம்பர் 2025 5:19:32 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)

திமுக அரசின் அலட்சியத்தால் தாமிரபரணி முற்றிலும் சீரழிந்துள்ளது: நயினார் நாகேந்திரன் அறிக்கை
புதன் 10, செப்டம்பர் 2025 3:50:08 PM (IST)

அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அண்ணாமலை கண்டனம்!!
புதன் 10, செப்டம்பர் 2025 3:41:55 PM (IST)

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் : தூத்துக்குடி வழங்கறிஞர் சங்கம் மறுப்பு
புதன் 10, செப்டம்பர் 2025 3:11:21 PM (IST)

போலி பத்திர பதிவுக்கு உதவியதாக சார் பதிவாளர் சஸ்பெண்ட்: பத்திரப்பதிவுத் துறை உத்தரவு
புதன் 10, செப்டம்பர் 2025 12:51:46 PM (IST)
