» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி பத்திர பதிவுக்கு உதவியதாக சார் பதிவாளர் சஸ்பெண்ட்: பத்திரப்பதிவுத் துறை உத்தரவு

புதன் 10, செப்டம்பர் 2025 12:51:46 PM (IST)

நெல்லையில், போலியான முறையில் பத்திரப் பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக  சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி என். ஜி. ஓ., காலனியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஆணையர் குளம் பகுதியில் 21 சென்ட் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேலாகும். கடந்த ஜூன் மாதம், அந்நிலத்தை கிருஷ்ணாபுரம் சேர்ந்த ராஜவேல் என்பவர், போலி ஆவணங்கள் தயாரித்து மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது ஜவஹர் அலிக்கு விற்றதாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.

சம்பவம் குறித்து சரவணன் புகாரை தொடர்ந்து, பெருமாள்புரம் போலீசார் ராஜவேல், முகமது ஜவஹர் அலி, உடந்தையாக இருந்த முத்துப்பாண்டி, ஆனந்தவேல் மற்றும் மேலப்பாளையம் சார்பதிவாளர் காட்டுராஜா ஆகிய 5 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில் முத்துப்பாண்டி, முகமது ஜவஹர் அலி கைது செய்யப்பட்டனர்.

சார்பதிவாளர் காட்டு ராஜா, என். ஜி. ஓ., காலனி பகுதியில் அரசின் பல்வேறு ஓ.எஸ்.ஆர். நிலங்களை போலியான முறையில் பத்திரப் பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் மேலப்பாளையத்திலிருந்து ஆடிட் பிரிவில் சாதாரணப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். 

இதனிடையே இப்பிரச்னையில் நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். இதுபோல வங்கி முடக்கிய சொத்துக்களை போலி பத்திரப்பதிவு செய்து தந்தது தொடர்பாக கடலுார் பொறுப்பு சார் பதிவாளர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory