» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்!

வெள்ளி 16, மே 2025 11:51:32 AM (IST)

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.

தவெக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: வக்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தவெக இஸ்லாமியர்களுக்கு துணைநிற்கும். வக்பு சட்டத்துக்கு எதிராக திமுக கட்சி சார்பிலோ அல்லது தமிழக அரசு சார்பிலோ எந்த வழக்கையும் தொடுக்கவில்லை.

திமுகவை சேர்ந்த ஒரு சில தனிநபர்கள் வேண்டுமானால் வழக்கு தொடுத்திருக்கலாம். வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதை வீட்டில் பூட்டி வைத்து என்ன பயன்? வக்பு விஷயத்தில் திமுக கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. தங்களுக்கு லாபம் இருக்கும் விஷயத்தில் மட்டுமே திமுக தலையிடும். வக்பு விஷயத்தில் திமுக துரோகத்தை தான் செய்யும்.

திமுக நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் இல்லை. திமுகவினர் ஆளுநரைத்தான் எதிரியாக சித்தரித்து, 4 ஆண்டுகளாக அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில், மத்திய அரசை நேரடியாக எதிர்த்திருக்கிறார்களா? அமித்ஷாவையும், மோடியையும் எதிர்ப்பதில் அவர்களுக்கு பயம் உண்டு.

வக்பு சொத்துகளை யாரெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் கூட்டணி குறித்து தவெக தலைவர் விஜய் முடிவு செய்வார். எங்கள் கொள்கைக்கு எதிராக இருப்பவர்களுடனும், திமுகவுடனும் உறவு இருக்காது. அதேபோல, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory