» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: மே 19ல் தற்காலிக சான்றிதழ்!
ராதாகிருஷ்ணன் | வெள்ளி 16, மே 2025 5:24:52 PM (IST)
10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
10, 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 சதவீதம் பேரும், 11ம் வகுப்பு தேர்வில் 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் தேர்வாகாத மாணவர்களுக்கு துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை 10ம் வகுப்புக்கும், ஜூலை 4ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை 11ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
ஜூலை 4 (வெள்ளி): தமிழ்மொழி மற்றும் இதர மொழிகள்
ஜூலை 5 (சனி): தேர்வுத் தேர்ந்தெடுக்கக்கூடிய மொழி
ஜூலை 7 (திங்கள்): ஆங்கிலம்
ஜூலை 8 (செவ்வாய்): கணிதம்
ஜூலை 9 (புதன்): அறிவியல்
ஜூலை 10 (வியாழன்): சமூக அறிவியல்.
11ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
ஜூலை 4 (வெள்ளி): தமிழ்மொழி மற்றும் இதர மொழிகள்
ஜூலை 5 (சனி): ஆங்கிலம்
ஜூலை 7 (திங்கள்): உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம், அடிப்படை பொறியியல் பாடங்கள், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை
ஜூலை 8 (செவ்வாய்): இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள்
ஜூலை 9 (புதன்): தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி, உயிர்வேதியியல், மேம்பட்ட தமிழ், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்வழி நர்சிங், மின்சார பொறியியல்
ஜூலை 10 (வியாழன்): வேதியியல், கணக்கியல், புவியியல்
ஜூலை 11 (வெள்ளி) : கணிதம், உயிரியல் ஆய்வு, வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, ஆடைகள் வடிவமைப்பு, உணவுசேவை, வேளாண் அறிவியல், பொதுநல நர்சிங்
தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுடன் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வர வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 10, 11ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் மே 19 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தாங்கள் பயின்ற பள்ளிகளில் மே 19 பிற்பகல் 2 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கைக்கு 600 லிட்டர் பெட்ரோல் கடத்தல்: நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 3 பேர் கைது
ராதாகிருஷ்ணன் | வெள்ளி 16, மே 2025 5:45:37 PM (IST)

ஒரே மையத்தில் 167 பேர் பிளஸ் 2 வேதியியலில் 100 மதிப்பெண் : அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
ராதாகிருஷ்ணன் | வெள்ளி 16, மே 2025 5:09:35 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
ராதாகிருஷ்ணன் | வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)

வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுக ஆட்சிதான் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி
ராதாகிருஷ்ணன் | வெள்ளி 16, மே 2025 3:57:59 PM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி!
ராதாகிருஷ்ணன் | வெள்ளி 16, மே 2025 3:32:32 PM (IST)

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 வாலிபர்கள் கைது
ராதாகிருஷ்ணன் | வெள்ளி 16, மே 2025 12:40:51 PM (IST)
