» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வரும் 2026 மட்டுமல்ல, 2031, 2036-லும் திமுக ஆட்சிதான் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

வெள்ளி 16, மே 2025 3:57:59 PM (IST)

வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்..

உதகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 16) காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், "உதகை பயணம் சிறப்பாக அமைந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. மக்களைச் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திமுக ஆட்சிக்கு தரும் ஆதரவைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சுற்றுலா நிமித்தமாக வந்த மக்களும் திமுக அரசுக்கான ஆதரவை வெளிப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருந்தது. மலர்க் கண்காட்சி எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது.

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடன் பேசி அவர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம்.மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என ப.சிதம்பரம் கூறியது அவருடைய கருத்து. வரும் 2026 தேர்தல் மட்டுமல்ல, 2031, 2036 தேர்தல்களிலும் தமிழ்நாட்டில் திமுகதான் ஆட்சி அமைக்கும்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory