» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!

வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)



கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் நலச்சங்கம் சார்பில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பாலக்காடு - தூத்துக்குடி வரை செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என கடந்த வாரம் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி இரவு 11:15 மணிக்கு கல்லிடைக்குறிச்சிக்கு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏராளமான பயணிகளும் பொதுமக்களும் மலர் தூவி வரவேற்றனர். 

விழாவுக்கு சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமை தாங்கினார். செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.  வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம், அம்பை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ, பேரூராட்சி துணைத் தலைவர் இசக்கிப் பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

பெரிய பள்ளி ஜமாஅத் தலைவர் அப்துல் மஜீத், பாஜக ஒன்றிய தலைவர் இசக்கி முத்து, நகர திமுக ஹனிபா, ஜார்ஜ், அதிமுக நகர செயலாளர் முத்துகிருஷ்ணன், தென்காசி மாவட்ட பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா, கல்லிடை ரயில் சங்கத்தின் சீதாராமன், அப்துல் சமது, ஜான் பால் விக்கிள்ஸ்வொர்த், ஜவஹர் மனோகர், மோகன், ஷரீஃப், ஒளி மாலிக், ரசாக், ஷாகித் மைதீன், அனீஸ் பாத்திமா,தானிஷ், நாலாயிர முத்து, கார்த்திக், சுரேஷ், ஆஸாத், சேரை சுல்தான் பீர் காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஜான் ஞானராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory