» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96.76% தேர்ச்சி ‍: மாநிலத்தில் தூத்துக்குடி மூன்றாவது இடம்!

வெள்ளி 16, மே 2025 10:19:24 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 96.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 308 பள்ளிகளில், 10,347 மாணவர்கள், 11,112 மாணவிகள் என மொத்தம் 21,459 பேர் தேர்வெழுதினர். அவர்களில் 9,867 மாணவர்கள், 10,897 மாணவிகள் என மொத்தம் 20,764 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் நிகழாண்டு 96.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 94.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நிகழாண்டு தேர்ச்சி சதவீதம் 2.37 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 9வது இடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டு 3வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள 308 பள்ளிகளில் 161 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 89 அரசு பள்ளிகளில் 35 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ன மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory