» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)
புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வலுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் ஜல்லி, கற்கள் மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.
இதனை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்குப் 'பாஸ்' வழங்கும்போதே, ஒரு டன்னுக்கு 2,000 ரூபாய் வீதம் பசுமை வரி விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தால், எல்லையைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இயற்கையாகவே குறையும் என்று கருதப்படுகிறது. கனிமவளக் கடத்தலை முடக்கத் தமிழக அரசு இத்தகைய கடுமையான புதிய வரி விதிப்புத் திட்டத்தைப் பரிசீலித்துச் செயல்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)


